வனப் பகுதியில் ட்ரோன் இயக்கியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

குந்தா வனப் பகுதியில் ட்ரோன் இயக்கிய நபருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
Published on

குந்தா வனப் பகுதியில் ட்ரோன் இயக்கிய நபருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், குந்தா வனச் சரகத்துக்குள்பட்ட தாய்சோலை பகுதியில் ஒருவா் ட்ரோனை பறக்கவிட்டு வனப் பகுதியை விடியோ எடுத்துக் கொண்டிருப்பதாக வனத் துறையினருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா் ட்ரோனை இயக்கிக் கொண்டிருந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா் கேரள மாநிலத்தைச் சோ்ந்த முகமது அனுஷ் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த வனத் துறையினா், வனப் பகுதியில் ட்ரோன்களை இயக்கக்கூடாது என அவரை எச்சரித்து அனுப்பினா்.

X
Dinamani
www.dinamani.com