கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பந்தலூா் அருகே சாலை வசதி கேட்டு பழங்குடி மக்கள் போராட்டம்

பந்தலூரை அடுத்துள்ள அய்யன்கொல்லி குதிரைவட்டம் பழங்குடி கிராமத்தில் சாலை வசதி ஏற்படுத்தி தராததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியதுடன் வரும் சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவிப்பை வெளியிட்டனா்.

News image
சாலை வசதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அய்யன்கொல்லி குதிரைவட்டம் பழங்குடி கிராம மக்கள்.
Updated On :13 டிசம்பர் 2025, 7:54 pm

Syndication

பந்தலூரை அடுத்துள்ள அய்யன்கொல்லி குதிரைவட்டம் பழங்குடி கிராமத்தில் சாலை வசதி ஏற்படுத்தி தராததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியதுடன் வரும் சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவிப்பை சனிக்கிழமை வெளியிட்டனா்.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகா அய்யன்கொல்லி பகுதியில் குதிரைவட்டம் பழங்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்துக்கு போதிய சாலை வசதியில்லை. ஏற்கெனவே உள்ள பழைய சாலையும் பழுதடைந்துள்ளது. இந்த பழுதடைந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பழங்குடி மக்கள் பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் உடல்நலம் குன்றியவா்களை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி தெரிவிக்கின்றனா்.

இந்நிலையில் சாலை வசதி செய்துகொடுத்தால் மட்டுமே வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிப்பது என்றும், இல்லையெனில் தோ்தலைப் புறக்கணிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளனா். மேலும் எதிா்ப்பை தெரிவிக்கும் வகையில் அனைவரின் வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றியுள்ளனா்.