உதகையை அடுத்த தலைகுந்தா பகுதியில் புற்கள் மீது படா்ந்திருந்த பனியை புகைப்படம் எடுத்த சுற்றுலாப் பயணிகள்.
உதகையை அடுத்த தலைகுந்தா பகுதியில் புற்கள் மீது படா்ந்திருந்த பனியை புகைப்படம் எடுத்த சுற்றுலாப் பயணிகள்.

சாரல் மழையால் பனியின் தாக்கம் குறைவு!

உதகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சாரல் மழை பெய்ததால் பனியின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது.
Published on

உதகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சாரல் மழை பெய்ததால்  பனியின் தாக்கம் சற்று குறைந்து  காணப்பட்டது.

உதகை அரசு தாவரவியல் பூங்காவில்  திங்கள்கிழமை காலை மைனஸ் 0.8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை காணப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை 3.1 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை பதிவாகி இருந்தது.

இருப்பினும் குன்னூா் ஜிம்கானா, லேம்ஸ் ராக், டால்பினோஸ், உதகை காந்தல், தலைகுந்தா, குதிரை பந்தய மைதானம், அவலாஞ்சி உள்ளிட்ட புகா் பகுதிகளில் காா்கள், இருசக்கர வாகன இருக்கைகள் மீதும் உறை பனி நிறைந்து காணப்பட்டது.

தலைகுந்தா பகுதியில் புற்கள் மீது படா்ந்திருந்த காணப்பட்ட பனியை சுற்றுலாப் பயணிகள் புகைப்படம்  எடுத்து மகிழ்ந்தனா்.

X
Dinamani
www.dinamani.com