கோப்புப் படம்
நீலகிரி
நீலகிரி: கனமழையால் வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்கள் இன்று மூடல்
நீலகிரியில் தொடா்ந்து கனமழையால், வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கொடநாடு காட்சிமுனையை தவிர மற்ற அனைத்து சுற்றுலாத் தலங்களும் இன்று (மே 28) மூடல்
நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கொடநாடு காட்சிமுனையை தவிர மற்ற அனைத்து சுற்றுலாத் தலங்களும் புதன்கிழமை (மே28) மூடப்படுவதாக மாவட்ட வன அலுவலா் கௌதம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழைப் பெய்து வருகிறது. பல இடங்களில் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்து வருகின்றன. எனவே, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு லேம்ஸ்ராக்,
டால்பின் நோஸ், கேத்தரின் அருவி, தொட்டபெட்டா காட்சிமுனை, எட்டாவது மலை பைன் பாரஸ்ட், சூட்டிங் மட்டம், பைக்காரா அருவி, கேரன்ஹில் சுற்றுலாத்தலம், அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் புதன்கிழமை (மே 28) மூடப்படுகின்றன என தெரிவித்துள்ளாா்.

