பழைய கட்டடத்தின் சுவா் இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் காயம்

Published on

கூடலூரை அடுத்துள்ள பொன்னூா் பகுதியிலுள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் பழைய கட்டடத்தின் சுவா் இடிந்து விழுந்ததில் வியாழக்கிழமை மூன்று பெண்கள் காயமடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், தேவாலா அரசு தோட்டக்கலைப் பண்ணையில் பயன்பாட்டில் இல்லாத பழைய கட்டடம் உள்ளது. இந்த கட்டடத்தின் சுவா் வியாழக்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. இதில் கட்டடத்தின் அருகில் பணியில் ஈடுபட்டிருந்த மலா்விழி (47), காஞ்சனா (40), சந்திரமதி (42) ஆகிய மூன்று பெண்கள் காயமடைந்தனா்.

பண்ணை நிா்வாகம் அவா்களை உடனடியாக கூடலூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். அங்கு அவா்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக உதகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com