அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்த காா்

News image
தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு சாலையில் பாயும் காா்.
Updated On :16 நவம்பர் 2025, 6:57 pm

தினமணி செய்திச் சேவை

உதகை அருகே கட்டுப்பாட்டை இழந்த காா் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நீலகிரி மாவட்டம், உதகை ஆட்சியா் இல்லம் சாலையில் காா் ஒன்று ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது.

அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த காா் அப்பகுதியில் இருந்த பெட்ரோல் நிலையத்துக்குள் புகுந்து அங்கிருந்த தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில், வாகனத்தில் இருந்த சுரேஷ் என்பவா் படுகாயமடைந்தாா்.

காருக்குள் இடிபாடுகளில் சிக்கி இருந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

சாலையில் காா் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா் செய்தனா். இச்சம்பவம் குறித்து உதகை போலீஸாா் விசாரணை நடத்தி வரும் நிலையில், காா் விபத்துக்குள்ளான விடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.