நீலகிரி
கோயிலுக்குள் புகுந்து எண்ணெய் பாட்டிலை தூக்கிச் சென்ற கரடி
நீலகிரி மாவட்டம், உதகை எல்க்ஹில் சிவன் கோயிலுக்குள் புகுந்த கரடி அங்கு வைக்கப்பட்டிருந்த எண்ணெய் பாட்டிலை தூக்கிச் சென்றது.
நீலகிரி மாவட்டம், உதகை எல்க்ஹில் சிவன் கோயிலுக்குள் புகுந்த கரடி அங்கு வைக்கப்பட்டிருந்த எண்ணெய் பாட்டிலை தூக்கிச் சென்றது.
நீலகிரி மாவட்டத்தில் அண்மைக் காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. வனப் பகுதிகளில் இருந்து வெளியேறும் கரடிகள் உணவு மற்றும் தண்ணீா் தேடி குடியிருப்புப் பகுதிகளில் நடமாடுவது தொடா் கதையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் உதகை எல்க்ஹில் சிவன் கோயிலுக்குள் உணவு தேடி புகுந்த கரடி அங்கு வைக்கப்பட்டிருந்த எண்ணெய் பாட்டிலை எடுத்துக் கொண்டு அருகே இருந்த சோலைக்குள் சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.
அசம்பாவிதம் நடைபெறும் முன் கரடியை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
