

தமிழகத்தில் சங்க காலம் தொட்டு சைவத்தோடு, பெüத்தமும் சமணமும் மக்களால் பின்பற்றப்பட்ட மதங்களாக இருந்துள்ளன. தமிழகத்தின் பல பகுதிகளில் பெüத்த பள்ளி வழிபாடு குறித்து பல வரலாற்று ஆய்வுக் குறிப்புகள் காணக் கிடைத்துள்ளன.
அந்த வகையில், புத்தரின் அடிப்படைக் கொள்கைகளை விளக்கும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது. மனித துன்பத்துக்கு ஆசையே காரணம் என புத்தரின் போதனையை ஒரு வரியில் கூறிடலாம். ஆனால், அவரது போதனைகளைப் படித்து ஆராய்ந்தால் அதில் அனைத்து உயிர்களுக்கான நன்மைகளும் உள்ளடங்கியிருப்பதை உணரலாம்.
தம்மபதம் எனும் பெüத்த கோட்பாடுகள் ஏற்கெனவே தமிழில் வெளியிடப்பட்டாலும், இந்த நூலானது எளிதில் படித்து புரியும் வகையில் 26 இயல்களாகப் பிரிக்கப்பட்டு விளக்கம் தரப்பட்டுள்ளது.
நூலைப் படிப்போர் ஊக்கம் பெறும் வகையில் பல்வேறு கருத்துகள் விளக்கப்பட்டிருப்பதால், பள்ளி மாணவர்கள் முதல் பட்டதாரிகள் வரை படிக்க வேண்டிய நூலாகத் திகழ்கிறது. நூலின் பக்கங்கள் 90. விலை ரூ.120.
நீலகிரி மலையின் பசுமைப் பள்ளத்தாக்கையும், அங்கு வாழும் மனிதர்கள், பறவைகள், விலங்கினங்கள், தட்பவெப்ப நிலைகள் என ரசித்து ரசித்து, படிப்போரையும் ரசிக்க வைத்துள்ளார் நூலாசிரியர் கோ.நடராசன்.
நீலகிரி மலைவாழ் மக்களான படுகர்கள் உள்ளிட்டோர் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கான பொருள் பொதிந்த அர்த்தத்தையும் அவர் விளக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மலைகளுக்கு இடையே உள்ள சமவெளியான ஆடாவின்
அழகுச் சிறப்பையும், கற்பூரச் சோலையின் அழகு, தொங்கல் விளையாட்டில் வில்லாக வளைக்கப்படும் தாவரம், தோடர்களின் எருமை வளர்ப்பு, மலைவாழ் குடிகள் பயன்படுத்தும் சாக்குப்பைகள் என நூலைப் படிக்கப் படிக்க அடர்ந்த வனத்துக்குள் நுழைந்து பார்க்கும் பரவசம் ஏற்படுகிறது.
பூண்டுக்காடு, பன்றிக்காவல் என 24 தலைப்புகளில் நீலகிரி மலையையும், அங்கு வாழும் பூர்வகுடி மக்களையும் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த நூல் 136 பக்கங்களுடன், ரூ.150 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிராமத்துத் தெருக்களில் தென்றலாய்த் தவழ்ந்த மேடைப் பாடல்களைப் பாடித்திரிந்த இளையராஜா, சென்னை வந்து திரையிசை அமைக்க அலைந்து திரிந்த விதத்தையும், அவர் அலைந்த தெருவிலேயே பிற்காலத்தில் திரையிசைப் பாடல் கூடம் அமைத்ததையும் அழகாகப் பதிவு செய்துள்ளார் நூலாôசிரியர்.
சிறு கிராமத்தில் பிறந்த இளையராஜா சிம்பொனி இசையமைக்க பயணித்த விதங்கள், பண்ணைபுரத்திலிருந்து பெருவிருட்சமாகி என்ற முதல் தலைப்பிலே நமக்கு விளக்கப்படுகிறது.இளையராஜா சிம்பொனி இசையமைத்திருப்பதை பெருமைக்குரியதாக நினைக்கும் மக்களுக்கு சிம்பொனி என்றால் என்ன என்பது நூலில் விளக்கப்பட்டுள்ளது.
இசை ராஜாங்கத்தின் உச்சத்திலிருக்கும் இளையராஜாவின் இசைப் பயணம் 37 தலைப்புகளில் விளக்கப்பட்டிருப்பதுடன், இசையமைத்த திரைப்படங்களின் பட்டியலும் இடம்பெற்றுள்ளது. 38}ஆவது தலைப்பாக சங்கத் தமிழுக்கு அவர் இசையமைத்து வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் நூல் நிறைவடைகிறது. இந்த நூல் 292 பக்கங்களுடன், விலை ரூ.300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.