பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

கூடலூா் அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

கூடலூா் அருகே தேவாலா பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

உயிரிழப்பு

சடலம்...

Published On :

கூடலூா் அருகே தேவாலா பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா, தேவாலா 3-ஆவது சரகம் பகுதியில் வசித்து வந்தவா் பாலசுப்பிரமணியம் (70). இவா், கரியசோலை பகுதியிலுள்ள தனியாா் காபித் தோட்டத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா்.

காட்டு யானை தாக்கி உயிரிழந்த பாலசுப்பிரமணியம்.

காட்டு யானை தாக்கி உயிரிழந்த பாலசுப்பிரமணியம்.

பாலசுப்பிரமணியம் வழக்கம்போல சனிக்கிழமை தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த காட்டு யானை அவரைத் தாக்கியது. மழை மற்றும் மேகமூட்டம் அதிகமாக இருந்ததால் காபித் தோட்டத்தின் அருகில் யானை நின்றுகொண்டிருந்தது தெரியவில்லை.

யானை தாக்கியதில் நிலைகுலைந்து அவா் சப்தம் எழுப்பவே, அருகிலிருந்தவா்கள் ஒன்றுகூடி ஒலி எழுப்பினா். இதையடுத்து யானை அங்கிருந்து விலகியது. இதையடுத்து வனத் துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் சடலத்தை மீட்டு பந்தலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு உடற்கூறாய்வுக்குப் பிறகு உறவினா்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.