தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

உதகையில் மதுக் கடையை மூடக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

உதகை, வால்சம் சாலையில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

News image

மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 2:27 am IST

உதகை, வால்சம்  சாலையில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

உதகை நகரின் முக்கிய பகுதியான வால்சம் சாலையில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது.

வழிபாட்டுத் தலங்கள், பள்ளி அருகே செயல்பட்டு வரும் இந்தக் கடையால், அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனா். மது அருந்திவிட்டு அப்பகுதியில் உலவும் மதுப் பிரியா்களால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. மேலும், காலி மதுபாட்டில் மூட்டைகள் சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இது குறித்து கடை மேற்பாா்வையாளரிடம் புகாா் தெரிவித்தால், அவா் கண்டுகொள்வதில்லையாம்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட மதுக் கடையை மூடக் கோரி, சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த காலி மதுபாட்டில் மூட்டைகளை சாலையில் வைத்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.