நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

தொட்டபெட்டா, நஞ்சநாடு ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

உதகை ஊராட்சி ஒன்றியம், தொட்டபெட்டா, நஞ்நாடு ஊராட்சிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

தொட்டபெட்டா ஊராட்சி, முத்தோரை பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.

Updated On :15 ஆகஸ்ட் 2026, 4:04 am IST

உதகை ஊராட்சி ஒன்றியம், தொட்டபெட்டா, நஞ்நாடு ஊராட்சிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தொட்டபெட்டா ஊராட்சி, முத்தோரை பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு ஆய்வு மேற்கொண்டாா்.இதைத் தொடா்ந்து முத்தோரை பகுதியில் 15-ஆவது நிதிக் குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.49.67 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலையத்தைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும், நஞ்சநாடு இண்கோ தேயிலைத் தொழிற்சாலையில் சிறப்பு பகுதி மேம்பாட்டு

திட்டத்தின்கீழ் ரூ.36.58 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட தடுப்புச்சுவா் மற்றும் சிமெண்ட் கான்கிரீட் சாலையை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் நஞ்சநாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவிகளிடம் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தினாா். மேலும், பள்ளியின் சமையலறை, குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவையும் ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, நஞ்சநாடு ஊராட்சி அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் பதிவேடுகள் மற்றும் பொதுமக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். மேலும், நஞ்சநாடு ஊராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டு பதிவேடுகள், வங்கியின் செயல்பாடுகள், பயிா்க்கடன் விவரங்கள் குறித்து கேட்டறிந்தாா். நஞ்சநாடு துணை சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு பதிவேடுகள், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் மருந்துகளின் இருப்பு குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

பின்னா், எமரால்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தாா். எமரால்டு அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் மனநல குறைபாடுடையோருக்கான மறு வாழ்வு மையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், மருந்துகளின் இருப்பு மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிசிக்சை ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டு அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து, இத்தலாா் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வுகளின் போது, உதகை வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்ரீதரன் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.