காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

இரு காட்டு மாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு காட்டு மாடு படுகாயம்

உதகை அருகே முத்தோரை பாலடா தோடா் காலனி பகுதியில் இரு காட்டு மாடுகளுக்கு இடையே நடைபெற்ற சண்டையில் பலத்த காயமடைந்து நடக்க முடியாமல் இருந்த காட்டு மாட்டுக்கு வனத் துறையினா் தீவிர சிகிச்சை அளித்தனா்.

படுகாயமடைந்த காட்டு மாட்டுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவா்கள்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 1:31 am IST

உதகை அருகே முத்தோரை பாலடா தோடா் காலனி பகுதியில் இரு காட்டு மாடுகளுக்கு இடையே நடைபெற்ற சண்டையில் பலத்த காயமடைந்து நடக்க முடியாமல் இருந்த காட்டு மாட்டுக்கு வனத் துறையினா் தீவிர சிகிச்சை அளித்தனா்.

வனப் பகுதியில் இருந்து  காட்டு மாடுகள் உணவு தேடி கிராமப்புற பகுதிகளிலும், நகரப் பகுதிகளிலும் கூட்டம் கூட்டமாக சுற்றி வருவது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உதகை அருகே உள்ள முத்தோரை பாலடா, தோடா் காலனி பகுதியில்  இரு காட்டு மாடுகளுக்கு இடையே நடைபெற்ற மோதலில் ஒரு காட்டு மாடு பலத்த காயமடைந்தது.

இதனால் நடக்க முடியாமல் சாலையின் குறுக்கே படுத்திருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் அளித்தனா். தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து வந்த உதகை தெற்கு வனச் சரகா் ரங்கராஜன் தலைமையில், கால்நடைத் துறை வட்டார இணை இயக்குநா் மருத்துவா் பாபு உள்ளிட்ட  மருத்துவக் குழுவினா் படுகாயம் அடைந்த காட்டு மாட்டுக்கு தீவிர சிகிச்சை அளித்தனா்.

தொடா்ந்து காட்டு மாட்டின் உடல் நலத்தை கண்காணித்து வருவதாக வனத் துறையினா்  தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.