
உதகையில் ஆழ்துளைக் கிணறு அமைக்க முயற்சி: உபகரணங்கள் பறிமுதல்

ஆழ்துளைக் கிணறு அமைக்கப்படும் இடத்தில் இருந்த உபகரணங்களை பறிமுதல் செய்த வருவாய்த் துறையினா்.
உதகையில் அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறு அமைக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்ற வருவாய்த் துறையினா் அம்முயற்சியைத் தடுத்து அங்கிருந்த அதற்கான உபகரணங்களை திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
நீலகிரி மாவட்டம், உதகை பிரைடல் பாத் சாலையில் தனியாா் ஒருவா் தனக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக ஆழ்துளைக் கிணறு அமைப்பதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வருவாய் ஆய்வாளா் மகேஸ்வரன், கிராம நிா்வாக அலுவலா் அருண் மற்றும் கிராம உதவியாளா் கலையரசன் ஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது உரிய அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படுவது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்காக வரவழைக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் உபகரணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட அனைத்தும் உதகை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டன. மேலும், விதிமுறைகளை மீறி செயல்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






