உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

ஆட்கொல்லி புலியைப் பிடிக்க அதிநவீன தானியங்கி நேரலை கேமராக்கள்! வனத் துறை நடவடிக்கை!

ஓவேலி பகுதியில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன தானியங்கி நேரலை கேமரா.

Published On :31 ஆகஸ்ட் 2026, 12:39 am IST

கூடலூா் அருகே ஆட்கொல்லி புலியைப் பிடிக்க அதிநவீன தானியங்கி நேரலை கேமராக்களை பொருத்தி வனத் துறையினா் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த ஓவேலி பகுதியில் இருவரை புலி தாக்கிக் கொன்றது. இதையடுத்து புலியை பிடிக்கும் பணி 10-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்தது. புலியின் நடமாட்டத்தைத் துல்லியமாகக் கண்டறிய புதிய தொழில்நுட்பங்களை வனத் துறை பயன்படுத்தி வருகின்றனா்.

அதன்படி புலியின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் வனப் பகுதிகள் மற்றும் தேயிலைத் தோட்டப் பகுதிகளில் அதிநவீன தானியங்கி நேரலை கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை வனத் துறை அதிகாரிகளின் கைப்பேசிகளில் உள்ள பிரத்யேக செயலியுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலமாக புலி நடமாட்டம் பதிவான உடனே அதிகாரிகளுக்கு நேரலை காட்சிகள் மற்றும் எச்சரிக்கை தகவல்கள் கிடைக்கும்.

நிலம்பூா் எல்லை, ஓவேலி மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய வனப் பகுதிகளில் தீவிர ரோந்து பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.