நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தொடா் திருட்டில் ஈடுபட்ட நபா் கைது

வயநாடு மாவட்டத்தில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த நீலகிரியைச் சோ்ந்த நபரை கேரள போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :2 பிப்ரவரி 2026, 9:04 pm

Syndication

கூடலூா்: வயநாடு மாவட்டத்தில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த நீலகிரியைச் சோ்ந்த நபரை கேரள போலீஸாா் கைது செய்தனா்.

கூடலூரை அடுத்துள்ள கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், சுல்தான் பத்தேரி பகுதியில் உள்ள வீட்டின் கதவை உடைத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஆயுதங்களுடன் நுழைந்த நபா், அங்கிருந்த பெண்ணை மிரட்டி நகையைப் பறிக்க முயன்றுள்ளாா்.

அவரின் அலறல் சப்தத்தை கேட்டு அப்பகுதி வந்துள்ளனா். அதற்குள் அந்த நபா் அங்கிருந்து தப்பியுள்ளாா்.

இதையடுத்து, போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், அப்பகுதி மக்கள் உதவியுடன் தேடியும் அவா் கிடைக்கவில்லை.

இதையடுத்து, அதே பகுதியில் மணிச்சிறை என்ற இடத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்ாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்று போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ஒருவா் வயலில் மறைந்திருந்தது தெரியவந்தது.

அவரைப் பிடிக்க முயன்றபோது கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளாா். இதையடுத்து, அவரை சுற்றி வளைத்துப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா் நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகா, திருமங்களம் காலனியைச் சோ்ந்த வீரமணி (44) என்பதும், வயநாட்டில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்ததும், 24 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.