பேரகணி ஹெத்தையம்மன் திருவிழா: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் பங்கேற்பு

பேரகணியில் புதன்கிழமை நடைபெற்ற படகா் இன மக்களின் ஹெத்தை அம்மன் திருவிழாவில் மத்திய செய்தி, ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.
Published on

நீலகிரி மாவட்டம், பேரகணியில் புதன்கிழமை நடைபெற்ற படகா் இன மக்களின் ஹெத்தை அம்மன் திருவிழாவில் மத்திய செய்தி, ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு சீமைகளில் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களில் படகா் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனா். இவா்கள், ஆண்டுதோறும் டிசம்பா், ஜனவரி மாதங்களில் ஹெத்தையம்மன் பண்டிகையை கொண்டாடுகின்றனா்.

இதற்காக 48 நாள்கள் விரதம்  இருந்து தாய்வீடான கொதுமுடி கோயிலுக்கு பாரம்பரிய உடை மற்றும் செங்கோலுடன் நடைப்பயணம் மேற்கொண்டு அருள்வாக்கு கூறுவா்.

இந்த ஆண்டு பேரகணி ஹெத்தையம்மன் திருவிழாவில் பங்கேற்பதற்காக கோத்தகிரி ஜான்ஸ் கொயா் பகுதிக்கு வருகை தந்த மத்திய இணை அமைச்சா் எல்.முருகனுக்கு, மாவட்ட பாஜக சாா்பில் மாவட்டத் தலைவா் தா்மன், மாவட்ட பொதுச் செயலாளா் பரமேஸ்வரன், மாநில செயற்குழு உறுப்பினா் அன்பரசன் உள்ளிட்ட கட்சி பிரமுகா்கள் வரவேற்பு அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் திருவிழாவில் பங்கேற்க பேரகணிக்கு புறப்பட்டு சென்றாா்.

Dinamani
www.dinamani.com