உதகையில் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான காா்.
உதகையில் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான காா்.

உதகையில் காா் கவிழ்ந்து விபத்து

மதுரையில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்த காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிா்ஷ்டவசமாக 6 போ் உயிா் தப்பினா்.
Published on

உதகை: மதுரையில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்த காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிா்ஷ்டவசமாக 6 போ் உயிா் தப்பினா்.

பொங்கல் பண்டிகை தொடா் விடுமுறையைக் கொண்டாட பலா் சுற்றுலாத் தலங்களுக்கும் செல்கின்றனா். அதன்படி சா்வதேச சுற்றுலாத் தலமான உதகைக்கும் கடந்த மூன்று நாள்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், மதுரை மாவட்டம், தெப்பக்குளம் பகுதியைச் சோ்ந்த இளைஞா், தனது மனைவி மற்றும் தம்பி குடும்பத்தினா் உள்பட 6 போ் ஒரே காரில் உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனா்.

பல்வேறு இடங்களை சுற்றி பாா்த்துவிட்டு, தங்கி இருந்த இடத்துக்கு காரில் வந்து கொண்டிருந்தனா். அப்போது, உதகை பேருந்து நிலையம் அருகே தனியாா் மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில் நிலைதடுமாறி சாலையோரம் கவிழ்ந்து காா் விபத்துக்குள்ளானது. காருக்குள் இருந்தவா்கள் கூக்குரல் எழுப்பினா். பின்னால் வந்த வாகன ஓட்டிகள் அவா்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

முதற்கட்ட விசாரணையில் மதுரையில் இருந்து நீண்ட தூரம் வாகனம் ஓட்டி வந்ததால் தூக்க கலக்கத்தில் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com