பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மாயாறு பகுதியில் தேங்காய் மூடியை வைத்து உருண்டு புரண்டு சேட்டை செய்த கரடி

உதகை அருகே மாயாறு சாலையில் தேங்காய் மூடி உடைப்பதற்காக கரடி உருண்டு புரண்டு சேட்டை செய்த விடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தேங்காய் மூடியை கையில் வைத்துள்ள கரடி.

Published On :

உதகை அருகே மாயாறு சாலையில் தேங்காய் மூடி உடைப்பதற்காக கரடி உருண்டு புரண்டு சேட்டை செய்த விடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் வன விலங்குகள் அடிக்கடி குடியிருப்புப் பகுதிகளுக்கும், சாலைகளுக்கும் வருவது வழக்கமாகிவிட்டது.

இந்நிலையில், மாயாறு பகுதிக்கு செல்லும் முக்கிய சாலையில் கரடி ஒன்று வெள்ளிக்கிழமை நுழைந்தது. அங்கு சாலையோரம் கிடந்த ஒரு தேங்காய் மூடியை எடுத்த கரடி, அதனை தன் வாயால் கடிக்கவும், கைகளால் உருட்டவும் தொடங்கியது. தேங்காய் மூடி உருண்டு ஓட, அதைத் துரத்திக் கொண்டு கரடியும் சாலையில் உருண்டு, புரண்டு விதவிதமாக சேட்டைகள் செய்யத் தொடங்கியது.

கரடியின் இந்த விசித்திரமான மற்றும் அழகான விளையாட்டை கண்ட வாகன ஓட்டிகள் ரசித்துச் சென்றனா். சிலா் தங்களது கைப்பேசியில் விடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.