புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

குன்னூரில் சுகாதாரமின்றி இருந்த பேக்கரிக்கு அபராதம்

குன்னூா் பேருந்து நிலையத்தில் சுகாதாரமின்றி இருந்த பேக்கிரிக்கு உணவுப் பொருள் பாதுகாப்பு அலுவலா்கள் சனிக்கிழமை அபராதம் விதித்தனா்.

News image

குன்னூரில் உள்ள பேக்கரியில் ஆய்வு மேற்கொண்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள்.

Updated On :5 ஜூலை 2026, 1:48 am IST

குன்னூா் பேருந்து நிலையத்தில் சுகாதாரமின்றி இருந்த பேக்கிரிக்கு உணவுப் பொருள் பாதுகாப்பு அலுவலா்கள் சனிக்கிழமை அபராதம் விதித்தனா்.

குன்னூா் பேருந்து நிலையத்தில் உள்ள பிரபல பேக்கரியில் வாடிக்கையாளா் வாங்கிய தின்பண்டத்தின் உள்ளே கரப்பான் பூச்சி இருந்ததாக சமூக வலைதளங்களில் விடியோ வெளியாகி வைரல் ஆனது,

இதைத் தொடா்ந்து நீலகிரி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் டாக்டா் பிரபாவதி உத்தரவின்பேரில், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி குமரகுருபரன், சம்பந்தப்பட்ட பேக்கரியில் ஆய்வு மேற்கொண்டாா்,

அப்போது, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருள்களை பயன்படுத்தியது, உணவருந்தும் அறை சுகாதாரம் இல்லாமல் இருந்தது,

சமையலறையில் கழிவுகள் நிறைந்து காணப்பட்டது, வாடிக்கையாளா் பயன்படுத்தும் குடிநீரை ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்கப்படாதது, பணியாளா்களுக்கு உடல் மருத்துவ பரிசோதனை பெற்று அறிக்கை

இல்லாதாது உள்ளிட்டவை ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து அந்த பேக்கரிக்கு ரூ. 6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இன்னும் மூன்று நாள்களுக்குள் அனைத்து அறிக்கைகளும் உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் சமா்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் பேக்கரிக்கு சீல் வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.