ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

குடியிருப்புப் பகுதியில் நிறுத்தப்பட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைப்பு

News image

உதகை அருகே துளசிமடம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் உடைக்கப்பட்ட கண்ணாடிகள்.

Updated On :7 ஜூலை 2026, 3:12 am IST

உதகை அருகே குடியிருப்பு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகளை மா்ம நபா்கள் உடைத்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நீலகிரி  மாவட்டம், உதகையில் உள்ள  துளசி மடம் பகுதியில் இரவு நேரங்களில் சாலையோரங்களில்  வாகனங்களை நிறுத்துவது வழக்கம். இந்நிலையில் இப்பகுதிக்கு இரவு நேரத்தில் வந்த மா்ம நபா்கள், காா் மற்றும் ஆட்டோ கண்ணாடிகளை கற்களால் சேதப்படுத்தியுள்ளனா்.

இதுகுறித்து  வாகன உரிமையாளா்கள் அளித்த புகாரின்பேரில், அப்பகுதியிலுள்ள பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி  உதகை டி-3 காவல் நிலைய போலீஸாா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.