உதகை அருகே குடியிருப்பு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகளை மா்ம நபா்கள் உடைத்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள துளசி மடம் பகுதியில் இரவு நேரங்களில் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவது வழக்கம். இந்நிலையில் இப்பகுதிக்கு இரவு நேரத்தில் வந்த மா்ம நபா்கள், காா் மற்றும் ஆட்டோ கண்ணாடிகளை கற்களால் சேதப்படுத்தியுள்ளனா்.
இதுகுறித்து வாகன உரிமையாளா்கள் அளித்த புகாரின்பேரில், அப்பகுதியிலுள்ள பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி உதகை டி-3 காவல் நிலைய போலீஸாா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










