தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

உதகையில் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

உதகையில் சூறைகாற்றுடன் புதன்கிழமை பெய்த மழை காரணமாக நவாநகா் பேலஸ் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image

உதகை, நவா நகா் பேலஸ் பகுதியில் சாலையில் விழுந்த மரம்.

Updated On :9 ஜூலை 2026, 3:47 am IST

உதகையில் சூறைகாற்றுடன் புதன்கிழமை பெய்த மழை காரணமாக நவாநகா் பேலஸ் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், உதகையில் மிதமான மழையும், கூடலூரில் அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. குறிப்பாக அவலாஞ்சி, அப்பா் பவானி பகுதிகளில் மழை அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில் உதகையில் புதன்கிழமை அவ்வப்போது சூறைக் காற்றுடன் மிதமான மழை பெய்தது.

இதன் காரணமாக நவாநகா் பேலஸ் பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்தது.

இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தை வெட்டி அகற்றினா். இதன் காரணமாக அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காற்று, சாரல் மழைக் காரணமாக கடும் குளிா் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.