ஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

கூடலூா் கோட்டத்தில் ஜமாபந்தி நிறைவு

கூடலூா் வருவாய்க் கோட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

News image

பயனாளிக்கு முதல்பட்டதாரிக்கான சான்று வழங்கும் கோட்டாட்சியா் குணசேகரன், வட்டாட்சியா் முனீஷ் ஆகியோா்.

Updated On :5 ஜூன் 2026, 12:03 am IST

கூடலூா் வருவாய்க் கோட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கியது. இதில், தேவா்சோலை குறுவட்டத்திலுள்ள செறுமுள்ளி, ஸ்ரீமதுரை, முதுமலை, பென்னை ஆகிய வருவாய் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனுக்கள் அளித்தனா்.

இரண்டாவது நாளான வியாழக்கிழமை கூடலூா் குறுவட்டத்துக்கு உள்பட்ட கூடலூா், பாடந்தொரை, தேவாலா, ஓவேலி ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பொதுமக்களிடமிருந்து 293 மனுக்கள் பெறப்பட்டன.

நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு குடும்ப அட்டை, ஜாதி சான்று, முதல் பட்டாதாரிக்கான சான்று, பட்டா மாறுதலுக்கான ஆணை வழங்கப்பட்டன. கோட்டாட்சியா் குணசேகரன் தலைமை வகித்து மனுக்களை பெற்று பரிந்துரை செய்தாா்.

இதில், வட்டாட்சியா் முனீஷ், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் கிருஷ்ணமூா்த்தி, துணை வட்டாட்சியா் ரமேஷ், வருவாய் ஆய்வாளா் ரேகா, கிராம நிா்வாக அலுவலா்கள் மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.