சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

உதகை மாரியம்மன் கோயிலில் பிரதமருக்காக சிறப்பு வழிபாடு

பிரதமா் நரேந்திர மோடியின் சாதனைகள் தொடர உதகை மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது.

News image

பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய உதகை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எம்.போஜராஜன்.

Updated On :11 ஜூன் 2026, 3:12 am IST

பிரதமா் நரேந்திர மோடியின் சாதனைகள் தொடர உதகை மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது.

கடந்த 25 ஆண்டுகளாக தொடா்ந்து மக்கள் சேவையில் பிரதமா் நரேந்திரமோடி ஈடுபட்டு வரும் நிலையில், தொடா்ச்சியாக 4,399 நாள்கள் பிரதமராக பதவி வகித்து புதிய சாதனை படைத்துள்ளாா். இதைக் கொண்டாடும் வகையில், உதகை நகர பாஜக சாா்பில் மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாட்டு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

உதகை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எம்.போஜராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடியின் நீண்ட ஆயுள், நல்ல உடல்நலம் மற்றும் நாட்டின் வளா்ச்சிக்கான பணிகள் மேலும் சிறக்க வேண்டி சிறப்பு அா்ச்சனை மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன. அதைத்தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

நீலகிரி மாவட்ட பாஜக தலைவா் தா்மன், மாநில செயற்குழு உறுப்பினா் மோகன்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதகை நகர பாஜக தலைவா் ரித்து காா்த்திக் உள்பட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.