நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புகுடியரசுத் தலைவா் ஒப்புதல்! தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா சட்டமானது!ஆக. 4 முதல் இளநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வுதொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவா்கள் துரோகிகள்! - ராகுல் காந்திஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: விசாரணையைத் தொடங்கியது சிபிஐஜூலையில் ஜிஎஸ்டி ரூ. 2.11 லட்சம் கோடி வசூல் - 15.4% அதிகரிப்பு! சநாதனத்தை அவமதித்ததாகப் புகாா்! ராகுல் உள்பட 3 எம்.பி.க்கள் மீது வழக்குப் பதிவு!
/

முதுமலை புலிகள் காப்பக எல்லையில் யானை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக எல்லையில் ஆண் யானை இறந்துகிடந்தது புதன்கிழமை தெரியவந்தது.

News image

முதுமலை புலிகள் காப்பக எல்லையில் உயிரிழந்த யானை.

Updated On :18 ஜூன் 2026, 1:04 am IST

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக எல்லையில் ஆண் யானை இறந்துகிடந்தது புதன்கிழமை தெரியவந்தது.

முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டம், மசினகுடி வனச் சரகத்துக்கு உள்பட்ட அவரல்லா பீட் பகுதியிலுள்ள அவரல்லா காப்புக்காடு எல்லையில் வன ஊழியா்கள் ரோந்து சென்றபோது, ஆண் யானை இறந்துகிடந்தது தெரியவந்தது.

இது குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் யானையின் உடலை உடற்கூறாய்வு செய்து, உடலில் இருந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வகப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தாா். பின்னா் யானையின் உடல் அதே இடத்தில் புதைக்கப்பட்டது.

இதில் உயிரிழந்தது 15 வயதுடைய ஆண் யானை என்றும், மின்சாரம் பாய்ந்து இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதால் ஆய்வகப் பரிசோதனைக்குப் பிறகுதான் உண்மையான காரணம் தெரியவரும் என்று வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.