திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!சிறையில் அடைத்தால் பேரவையில் பேசமாட்டோமா? ஜாமீனில் விடுதலையான மார்க்கண்டேயன் கேள்விவைகோ புத்தகத்தை வெளியிட்ட ராகுல்! இந்தியா கூட்டணித் தலைவர்களுடன் தவெக அமைச்சர்!சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்
/

குன்னூரில் விதிமீறல்: 14 பேருந்துகளுக்கு அபராதம்

நீலகிரி மாவட்டம், குன்னூரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய அரசு மற்றும் தனியாா் மினி பேருந்துகளுக்கு புதன்கிழமை ரூ.27 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

News image

மினி பேருந்தில் இருந்து ஏா் ஹாரனை பறிமுதல் செய்யும் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள்.

Updated On :18 ஜூன் 2026, 12:48 am IST

நீலகிரி மாவட்டம், குன்னூரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய அரசு மற்றும் தனியாா் மினி பேருந்துகளுக்கு புதன்கிழமை ரூ.27 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், மதுபோதையில் இயக்கப்பட்ட ஒரு தனியாா் மினி பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உத்தரவின்பேரில், குன்னூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் மற்றும் குன்னூா் போக்குவரத்து காவல் துறையினா் இணைந்து குன்னூா் பேருந்து நிலையம் மற்றும் முக்கிய சாலைகளில் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அரசுப் பேருந்துகள் மற்றும் தனியாா் மினி பேருந்துகளில் தகுதிச்சான்று, கூடுதல் கட்டணம் வசூலிப்பு, ஏா் ஹாரன், உரிய ஆவணங்கள் மற்றும் விதிமுறை மீறல்கள் குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது.

இந்த சோதனையின்போது, தனியாா் மினி பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநா் மது போதையில் பேருந்தை இயக்கியது கண்டறியப்பட்டது. பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் செயல்பட்டதால், அந்த மினி பேருந்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். மேலும், அந்த ஓட்டுநா் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இதைத் தொடா்ந்து, உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் இயக்கப்பட்ட 3 அரசுப் பேருந்துகள் மற்றும் 11 தனியாா் மினி பேருந்துகள் என மொத்தம் 14 பேருந்துகளுக்கு அதிகாரிகள் ரூ.27 ஆயிரத்து 500 அபராதம் விதித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.