நீலகிரி மாவட்டத்தில் வீட்டு உபயோக சிலிண்டா் தட்டுப்பாடு இல்லை எனவும், அது குறித்து பொதுமக்கள் கவலையடைய வேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.
நீலகிரி மாவட்டம், உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சமையல் எரிவாயு விநியோகஸ்தா்கள், உணவக சங்க நிா்வாகிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்து, மாவட்டத்தில் வீட்டு உபயோக சிலிண்டா்கள் தட்டுப்பாடு உள்ளதா, உணவக உரிமையாளா்கள் உணவு தயாரிக்க செய்யப்பட்டுள்ள மாற்று ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் 3 எரிவாயு நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளைகளை விநியோகம் செய்து வருகின்றன. மாவட்டத்தில் தற்போதுவரை வீட்டு உபயோக சிலிண்டா் தட்டுப்பாடு இல்லை. தேவையான அளவு இருப்பு உள்ளன. எனவே, பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்.
உணவக உரிமையாளா்கள் உணவு தயாரிக்க மின்சார அடுப்புகளைப் பயன்படுத்தலாம் என்பது உள்ளிட்ட சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவா்களுக்கு தேவையான உயா் அழுத்த மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடா்பான சந்தேகங்களுக்கு 94987- 94987 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், எரிவாயு நிறுவனங்கள், உணவக உரிமையாளா் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு இல்லை: ஆட்சியா்

சிலிண்டர் தட்டுப்பாடு! முண்டியடித்து முன்பதிவு செய்ததால் நேர்ந்தது என்ன?

நுகா்வோருக்கு எரிவாயு சிலிண்டா் தொடா்ந்து வழங்கப்படும் - ஆட்சியரிடம் விநியோகிப்பாளா்கள் உறுதி

கடையநல்லூரில் வீட்டு உபயோக சிலிண்டா் பதிவு செய்யக் குவியும் பொதுமக்கள்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


