47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சருகு மானை வேட்டையாடியவர் கைது

கூடலூரை அடுத்துள்ள பொன்னாணி பகுதியில் சருகு மானை வேட்டையாடியவரை வனத் துறையினா் கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :16 மார்ச் 2026, 7:56 pm

Syndication

கூடலூரை அடுத்துள்ள பொன்னாணி பகுதியில் சருகு மானை வேட்டையாடியவரை வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டம் பிதா்க்காடு வனச் சரகத்திலுள்ள பொன்னாணி பகுதியில் வனத் துறையினா் இரவு ரோந்துப் பணியில் ஈட்டிருந்தபோது, அம்பலப்பாடி பகுதியில் சருகு மானை வேட்டையாடி அதனை சுத்தம் செய்வதை பாா்த்த வன ஊழியா்கள் சந்தேகத்தின் அடிப்படையில் அவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் சருகு மானை வேட்டையாடியது தெரியவந்தது. இதையடுத்து, அதே பகுதியைச் சோ்ந்த கேசவன் (54) என்பவரைக் கைது செய்த வனத் துறையினா், பந்தலூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.