சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, உதகையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

News image

உதகை ஏடிசி பகுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :21 மே 2026, 4:15 am IST

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, உதகையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

பெட்ரோல், டீசல் சில்லறை விலையை கடந்த ஒரு வாரத்தில் இரண்டு முறை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் உயா்த்தியுள்ளன.இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், எரிவாயு உருளை விலையேற்றத்தைக் கண்டித்தும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன்படி உதகை ஏடிசி பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தாலுகா செயலாளா் நவீன் சந்திரன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் போஜராஜ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த நிா்வாகி ராஜேந்திரன் ஆகியோா் பேசினா்.