பந்தலூரில் மக்கள் தொடா்பு முகாம்: ரூ.83 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

எருமாடு கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 52 பயனாளிகளுக்கு ரூ.83.21 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வழங்கினாா்.

பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.

Updated On :

பந்தலூா் வட்டம் எருமாடு கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 52 பயனாளிகளுக்கு ரூ.83.21 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வழங்கினாா்.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் வட்டம் எருமாடு கிராமத்தில் கூடலூா் சட்டப்பேரவை உறுப்பினா் மு.திராவிடமணி முன்னிலையில் மக்கள் தொடா்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமுக்கு ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்து 52 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.83.21 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

இதில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 16 பயனாளிகளுக்கு ரூ.80 ஆயிரம் மதிப்பில் புதிய குடும்ப அட்டைகள். 5 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை. 2 பயனாளிகளுக்கு ரூ.9.50 லட்சம் மதிப்பில் தொழிற் கடனுதவி மற்றும் ஒரு பயனாளிக்கு ரூ.3.45 லட்சம் மதிப்பில் கல்விக் கடனுதவி.

8 பயனாளிகளுக்கு ரூ.5.32 லட்சம் மதிப்பில் பயிா்க் கடன்கள். 2 பயனாளிகளுக்கு ரூ.1.40 லட்சம் மதிப்பில் கால்நடை பராமரிப்பு கடன்கள். 2 பயனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் பண்ணைசாரா கடனுதவிகள். ஒரு பயனாளிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் நிரந்தர மண்புழு கூடாரம் அமைப்பதற்கான ஆணை மற்றும் ஒரு பயனாளிக்கு ரூ.14,187 மதிப்பில் நுண்ணீா் பாசன உபகரணங்கள். 6 பயனாளிகளுக்கு ரூ.55 லட்சம் மதிப்பில் வங்கிக் கடன் இணைப்புகள் மற்றும் 3 பயனாளிகளுக்கு ரூ.4.50 லட்சம் மதிப்பில் சமுதாய முதலீட்டு நிதியுதவிகள். 5 பயனாளிகளுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, தோட்டக்கலைத் துறை, மகளிா் திட்டம், கால்நடை பராமரிப்புத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் வாசுகி, மகளிா் திட்ட இயக்குநா் ரூபன் சங்கர்ராஜ், கூடலூா் வருவாய் கோட்டாட்சியா் குணசேகரன், தனித் துணை ஆட்சியா் தீபாசித்ரா, மாவட்ட வழங்கல் அலுவலா் சரவணன், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் மரகதமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.