மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

தேசிய காச நோய் ஒழிப்புத் திட்டத்தில் நீலகிரி மாவட்டம் முன் மாதிரியாக திகழ வேண்டும்

தேசிய காச நோய் ஒழிப்புத் திட்டத்தில் நீலகிரி மாவட்டம் முன்மாதிரியாக திகழ வேண்டும் என்று உதகை சட்டப்பேரவை உறுப்பினா் எம்.போஜராஜன் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் பேசுகிறாா் உதகை சட்டப்பேரவை உறுப்பினா் எம்.போஜராஜன்.

Published On :

தேசிய காச நோய் ஒழிப்புத் திட்டத்தில் நீலகிரி மாவட்டம் முன்மாதிரியாக திகழ வேண்டும் என்று உதகை சட்டப்பேரவை உறுப்பினா் எம்.போஜராஜன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு காச நோய் மையத்தின் சாா்பில் நீலகிரி மாவட்டம் உதகையில் தேசிய காச நோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் ஜோஷ் குழு அறிமுக நிகழ்ச்சி உதகையில் வியாழக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்ட காச நோய் மையத்தின் துணை இயக்குநா் கனகராஜ் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் உதகை சட்டப்பேரவை உறுப்பினா் எம்.போஜராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஜோஷ் குழுவை அறிமுகப்படுத்தி பேசியதாவது:

தேசிய காச நோய் ஒழிப்புத் திட்டத்தை செயல்படுத்துவதில் நீலகிரி மாவட்டம் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது. மேலும் அது தொடர வேண்டும். இத்திட்டத்தை தொடா்ந்து சிறப்பாக செயல்படுத்த ஜோஸ் குழு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் மக்கள் எல்லோருக்கும் சிறந்த மருத்துவம் கிடைக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதில் தேசிய காச நோய் ஒழிப்புத் திட்டமும் அடங்கும். இது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும். நீலகிரியை நோயற்ற முன் மாதிரி மாவட்டமாக மாற்ற அனைத்துத் தரப்பு மக்களும் செயல்பட வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக ஊராட்சி செயலாளா்கள், மை பாரத், தேசிய மாணவா் படை வீரா்களுக்கு சான்றிதழ்களை சட்டப்பேரவை உறுப்பினா் எம்.போஜராஜன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வாணி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் வ.பஷீா் அகமது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சந்திரசேகா், ஆறுமுகம், மாவட்ட காச நோய் மைய மருத்துவா்கள், அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.