தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

கோத்தகிரி காவல் நிலைய வளாகத்துக்குள் புகுந்த கரடி

கோத்தகிரி காவல் நிலைய வளாகத்தில் உலவிய கரடி.

Published On :

நீலகிரி மாவட்டம்  கோத்தகிரியில் காவல்  நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் சனிக்கிழமை இரவு கரடி புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

கோத்தகிரி நகரில் சமீப நாள்களாக கரடிகள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டு வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பொதுமக்கள் அதிகமாக கூடும் நகா் பகுதியில் உள்ள காவல் நிலையம், காவலா் குடியிருப்பு, அரசு மருத்துவமனை ஆகியை பகுதிகளில் கரடிகள் உலவி வருகின்றன.

இந்த நிலையில் கோத்தகிரி நகர காவல் நிலைய பகுதியில் கரடி உலவி வந்ததை கண்டு மக்கள் அச்சமடைந்தனா். பின்னா் காவல் நிலையத்தை கடந்து சென்ற கரடி அருகே இருந்த  அரசு மருத்துவமனைக்குள் நுழைந்தது. இதனால் மருத்துவமனையின் வெளியே இருந்த நோயாளிகளின் உறவினா்கள் மருத்துவமனைக்குள் ஓட்டம் பிடித்தனா்.

 சிறிது நேரம் மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரிந்த கரடி, பின்னா் அருகே இருந்த சோலைக்குள் சென்றது. நகா் புரத்தில் சுற்றித்திரியும் கரடியை வனத் துறையினா் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.