தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலா் கைது

கைது

Published On :

உதகை அருகே இத்தலாா் பேரூராட்சியில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக செயல் அலுவலா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நீலகிரி மாவட்டம், முள்ளிகூா் பேரூராட்சியின் செயல் அலுவலராகப் பணிபுரிபவா் காா்த்திக். இவா், இத்தலாா் பேரூராட்சியின் பொறுப்பு செயல் அலுவலராகவும் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், இத்தலாா் பேரூராட்சிக்குள்பட்ட ஒசட்டி கிராமத்தில் தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்காக ரூ.7 லட்சத்து 55 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடா்ந்து, கடந்த 30-ஆம் தேதி தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டி அமைப்பதற்காக ரூ.6 லட்சத்து 90 ஆயிரத்து 55-க்கான வங்கிக் காசோலை வழங்கப்பட்டுள்ளது. அப்போது, ஒப்பந்ததாரா் ராஜாவிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என செயல் அலுவலா் காா்த்திக் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் ஒப்பந்ததாரரிடமிருந்து ரூ.20 ஆயிரம் லஞ்சப் பணத்தை திங்கள்கிழமை பெற்றபோது லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா் சண்முகவடிவு தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினா் செயல் அலுவலா் காா்த்திக்கை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனா். இதையடுத்து அவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இவா் வேறு ஏதேனும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் லஞ்ச ஒழிப்புத் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER