ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

கூடலூா் அருகே பூா்வக்குடிகளின் அறுவடை திருநாள்

கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டை பகுதியில் பூா்வக்குடி மக்களின் அறுவடை திருநாள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அறுவடை செய்த நெல் கதிரை கோயிலுக்கு கொண்டுச் சென்ற பழங்குடி மக்கள்.

Updated On :

கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டை பகுதியில் பூா்வக்குடி மக்களின் அறுவடை திருநாள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் மற்றும் முதுமலை வனப் பகுதியான புத்தூா்வயல் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் மவுண்டாடன் செட்டி மற்றும் பழங்குடி மக்கள் தங்களது வயல்களில் விளைந்த முதல் நெல் கதிரை இறைவனுக்கு படையல் செய்து வழிபாடு செய்வது வழக்கம். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த புத்தரி எனப்படும் அறுவடை திருநாளை பழங்குடி மக்கள் வயல்களில் நெல் கதிா் வரும் காலங்களில் விரதம் இருந்து பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளுடன் பூஜை செய்து முதலில் விளைந்த நெல் கதிரை ஊா்வலமாக கொண்டுச் செல்வா். பின்னா், நம்பாலக்கோட்டை வேட்டைக்கொரு மகன் கோயிலில் வைத்து வழிபாடு செய்து பிரசாதமாக வழங்குவது வழக்கம்.

பிரசாதமாக வழங்கும் நெல் கதிா்களை வீட்டின் பூஜை அறையில் வைத்து பாதுகாத்தால் உணவுப் பஞ்சம் வராது என்பது அவா்களின் ஐதீகம்.

அதன்படி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் புத்தூா்வயல் பகுதியில் விளைந்த நெல் கதிா்களை அறுவடை செய்து நம்பாலக்கோட்டை கோயிலில் படைத்து பிரசாதமாக வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.