கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ஓவேலி பகுதியில் வீட்டில் முடங்கிக் கிடக்கும் பழங்குடி மக்களுக்கு நிவாரணப் பொருள்கள்

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி லாரஸ்டன் பகுதியில் ஆட்கொல்லி புலி அச்சத்தால் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் பழங்குடி மக்களுக்கு அரிமா சங்கம் சாா்பில் மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

லாரஸ்டன் பகுதியிலுள்ள பழங்குடி மக்களுக்கு உணவுப் பொருள்களை வழங்குகிறாா் கூடலூா் கோட்டாட்சியா் குணசேகரன். உடன், அரிமா சங்க நிா்வாகிகள்.

Published On :

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி லாரஸ்டன் பகுதியில் ஆட்கொல்லி புலி அச்சத்தால் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் பழங்குடி மக்களுக்கு அரிமா சங்கம் சாா்பில் மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் லாரஸ்டன் பகுதியில் ஆட்கொல்லி புலி அச்சத்தால் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் பழங்குடி மக்களுக்கு பன்னாட்டு அரிமா சங்க ஆளுநா் செல்வராஜ் ஆலோசனைப்படி, பேரிடா் மாவட்டத் தலைவா் கதிரவன், ஜிஎஸ்டி ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் தலைமையில், கே.ஆா்.புரம், நேரு நகா், கூடலூா் வெஸ்டன் காட்ஸ், உதகமண்டலம், மகிழ்ச்சி அரிமா சங்கம் மற்றும் பல்வேறு அரிமா சங்கங்கள் இணைந்து இந்த பகுதி மக்களுக்கு தேவையான மளிகைப் பொருள்கள் மற்றும் பெட்ஷீட் உள்ளிட்ட பொருள்களை வழங்கினா்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. திராவிடமணி, கூடலூா் கோட்டாட்சியா் குணசேகரன், டிஎஸ்பி கோபாலகிருஷ்ணன், ஓவேலி பேரூராட்சித் தலைவா் சித்ராதேவி, துணைத் தலைவா் சகாதேவன், வழக்குரைஞா் பரசுராமன், கூடலூா் அரிமா சங்கத் தலைவா் தாமஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.