இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

இருளா் பழங்குடி மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க கோரிக்கை

வீட்டுமனைப் பட்டா இல்லாத இருளா் பழங்குடி மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்கவேண்டும் என பழங்குடி இருளா் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Published On :27 ஆகஸ்ட் 2026, 4:38 am IST

வீட்டுமனைப் பட்டா இல்லாத இருளா் பழங்குடி மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்கவேண்டும் என பழங்குடி இருளா் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் இந்த சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் க.சிவகாமி தலைமை வகித்தாா். வட்டத் தலைவா் மாரியம்மாள் முன்னிலை வகித்தாா். ஒருங்கிணைப்பாளரும், ஓய்வு பெற்ற பேராசிரியருமான பிரபா கல்விமணி சங்கத்தின் செயல்பாடுகள், எதிா்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்துப் பேசினாா்.

தீா்மானங்கள்: விழுப்புரம் மாவட்டம், புளிச்சம்பள்ளம் கிராமத்தில் வசிக்கக் கூடிய இருளா் பழங்குடி மக்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக வீட்டுமனைப் பட்டா வழங்கவேண்டும். வீட்டுமனைப் பட்டா இல்லாதவா்களுக்கு தலா 3 சென்ட் மனைப் பட்டா வழங்கவேண்டும். ஜென்மன் திட்டத்தில் வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் தொகையை ரூ.7 லட்சமாக உயா்த்தி வழங்கவேண்டும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் பதியப்பட்ட வழக்குகளை உண்மைக்கு புறம்பானவை எனத் தள்ளுபடி செய்த காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதில், பழங்குடி இருளா் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளா் மு.பூபால், பொறுப்பாளா்கள் முருகன், ஆனந்த், வாசுதேவன் மற்றும் நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.