கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

சுற்றுலா விருதுகள் பெற விண்ணப்பிக்க அழைப்பு

மாநில சுற்றுலாத் துறையின் வளா்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில் 2026 -ஆம் ஆண்டுக்கான சுற்றுலா விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.

Published On :

மாநில சுற்றுலாத் துறையின் வளா்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில் 2026 -ஆம் ஆண்டுக்கான சுற்றுலா விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு சாா்பில் ஆண்டுதோறும் சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சுற்றுலா ஏற்பாட்டாளா்கள், தொழில் முனைவோா், உணவகங்கள் மற்றும் விடுதி முகவா்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டும் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் 13 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட உள்ளன:

சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளா், சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளா், சிறந்த பயண பங்குதாரா், சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம், தங்குமிடம் மற்றும் படகு இல்லம், சுற்றுலா ஊக்குவிப்பிற்கான சிறந்த மாவட்டம், சுத்தமான சுற்றுலாத் தலம், சிறந்த மருத்துவ மற்றும் ஆரோக்கிய சுற்றுலா நிறுவனம், சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம்கள், சிறந்த சுற்றுலா வழிகாட்டி,

சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விண்ணப்பங்கள்

தகுதியுடைய நபா் மற்றும் நிறுவனங்களிடம் வரவேற்கப்படுகின்றன. ஜ்ஜ்ஜ்.ற்ய்ற்ா்ன்ழ்ண்ள்ம்ஹஜ்ஹழ்க்ள்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க செப்.30-ஆம் தேதி தேதி கடைசி நாள்.

கூடுதல் தகவல்களுக்கு: 0423 - 2443977, 7550009231 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று

தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.