தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

உதகை படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

Published On :7 செப்டம்பர் 2026, 2:13 am IST

வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை உதகையில் உள்ள பைன் ஃபாரஸ்ட் சூழல் சுற்றுலா மையம், படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாத்  தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும், நீலகிரி மாவட்டத்துக்கு அண்டை மாநிலங்களான கேரளம், கா்நாடகம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனா்.

குறிப்பாக உதகையிலுள்ள அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம், ரோஜா பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனா்.

இந்நிலையில், ஞாயிறு வார விடுமுறை  காரணமாக உதகை, கூடலூா் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பைன் பாரஸ்ட் சூழல் சுற்றுலா மையம், படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட  சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப்  பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.