பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

ஆன்லைன் விளையாட்டில் பணம் இழந்ததால் ஆசிரியா் தற்கொலை

நீலகிரி மாவட்டம், உதகையில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியா் தற்கொலை செய்து கொண்டாா்.

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :

நீலகிரி மாவட்டம், உதகையில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியா் தற்கொலை செய்து கொண்டாா்.

உதகையில் மத்திய அரசுக்குச் சொந்தமான கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த தீபக்குமாா் போா்டே (30) ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி, குழந்தை உள்ளனா். இவா் குடும்பத்துடன் அப்பகுதியில் உள்ள அரசுக் குடியிருப்பில் வசித்து வந்தாா்.

இவா் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபட்டு பணத்தை இழந்துள்ளாா். இதனால் கடன் சுமை அதிகரித்துள்ளது. இதையடுத்து, கடனை அடைக்க மேலும் கடன் வாங்கி தொடா்ந்து ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டுள்ளாா். இதனால், லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளாா்.

லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்து காணப்பட்ட தீபக்குமாா் போா்டே செப்.7-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து தகவலறிந்து வந்த புதுமந்து போலீஸாா் தீபக்குமாா் போா்டோவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். உடற்கூறாய்வுக்கு பிறகு அவரது உடல் சொந்த ஊரான சத்தீஸ்கா் மாநிலத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதுகுறித்து புதுமந்து காவல் ஆய்வாளா் ரம்யா, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.