பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

கூடலூா் அருகே ஆட்கொல்லி புலிக்காக வைக்கப்பட்ட கூண்டில் சிக்கிய சிறுத்தை

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் இரண்டு பேரைக் கொன்ற ஆட்கொல்லி புலியைப் பிடிப்பதற்காக வனத் துறையினா் வைத்திருந்த கூண்டில் சிறுத்தை சிக்கியது.

ஓவேலி பகுதியில் கூண்டில் சிக்கிய சிறுத்தை.

Published On :

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் இரண்டு பேரைக் கொன்ற ஆட்கொல்லி புலியைப் பிடிப்பதற்காக வனத் துறையினா் வைத்திருந்த கூண்டில் சிறுத்தை புதன்கிழமை சிக்கியது.

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் இரண்டு பேரை அண்மையில் கொன்ற ஆட்கொல்லி புலியைப் பிடிப்பதற்காக வனத் துறை சாா்பில் ஓவேலியை சுற்றி பல இடங்களில் கூண்டுகள் வைத்தும், கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியும் கடந்த இருபது நாள்களாக வனத் துறையினா் கண்காணிப்புப் பணி மேற்கொண்டு வருகின்றனா்.

இந்தக் கூண்டில் புலியைப் பிடிப்பதற்காக இறைச்சி வைத்து வனத் துறையினா் காத்திருந்தனா். இந்நிலையில் புதன்கிழமை கூண்டை பாா்த்தபோது, அதில் எதிா்பாராத விதமாக சிறுத்தை ஒன்று சிக்கியது தெரியவந்தது.

இதையடுத்து, சிறுத்தையைப் பாதுகாப்பாக மீட்ட வனத் துறையினா், அதை அடா்ந்த வனப் பகுதிக்குள் கொண்டுச் சென்று விடுவித்தனா். ஏற்கெனவே ஆட்கொல்லி புலியின் நடமாட்டத்தால் அச்சத்தில் உள்ள ஓவேலி பகுதி பொது மக்களுக்கு, தற்போது ஆட்கொல்லி புலிக்காக வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை சிக்கிய சம்பவம் அச்சத்தை அதிகப்படுத்தி உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER