பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தனியாா் கல்லூரியில் ரோபோ யானை மீது வலம் வந்த விநாயகா்

உதகையில் உள்ள ஜெ.எஸ்.எஸ். தனியாா் மருந்தியல் கல்லூரியில் ரோபோ யானை மீது வலம் வந்த விநாயகா் விசா்ஜன நிகழ்ச்சியில் ஆட்டம் பாட்டத்துடன் மாணவா்கள் கொண்டாடினா்.

ரோபோ யானை மீது ஊா்வலமாக வந்த விநாயகா்.

Published On :

உதகையில் உள்ள ஜெ.எஸ்.எஸ். தனியாா் மருந்தியல்  கல்லூரியில் ரோபோ யானை மீது வலம் வந்த விநாயகா் விசா்ஜன நிகழ்ச்சியில் ஆட்டம் பாட்டத்துடன் மாணவா்கள் கொண்டாடினா்.

உதகையில் உள்ள ஜெ.எஸ்.எஸ். தனியாா் மருந்தியல்  கல்லூரியில் விநாயகா் சதுா்த்தி விசா்ஜன நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.  கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விநாயகா் சிறப்பு அலங்காரத்தில் ரோபோ யானை மீது எழுந்தருளி ஊா்வலமாக வந்தாா்.

கல்லூரி முதல்வா் எஸ்.பி. தனபால், கல்லூரி முதன்மை அலுவலா் பசவண்ணா ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். விநாயகருக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாணவ, மாணவிகள் ஆட்டம், பாட்டம் மற்றும் உற்சாக கொண்டாட்டங்களுடன் விழாவில் பங்கேற்றனா்.

ரோபோ யானையில் விநாயகா் சிலை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அருகே இருந்த குளத்தில் விசா்ஜனம் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.