தமிழகத்தில் நிலவும் மின்வெட்டைக் கண்டித்து, திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை தேமுதிக சார்பில் நடைபெற இருந்த பேரணிக்கு போலீஸார் தடை விதித்துள்ளனர்.
தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்னையால், திருப்பூர் பின்னலாடை தொழில் உள்பட பல்வேறு தொழில்கள் நலிந்து வருவதாகவும், இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி, தேமுதிக சார்பில் கண்டன பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. திருப்பூர்-ஊத்துக்குளி சாலை அணைக்காடு பஸ் நிறுத்தம் அருகே தனலட்சுமி மில் மைதானத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இதையொட்டி, தேமுதிக சார்பில் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பேரணிக்கு போலீஸார் தடை விதித்துள்ளனர். ஏற்கெனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரமாக திருப்பூர் இருப்பதால், தேமுதிக பேரணி நடத்த அனுமதி மறுக்கப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜஸ்தானில் கடும் புழுதிப் புயல்! | Rajastan | Shorts

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!
விடியோக்கள்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


