ஜந்தர் மந்தரில் போராட்டம்: 150 சிஜேபி ஆதரவாளர்கள் கைது!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இணைப்பு பேருந்து சேவை: மாநகர போக்குவரத்து கழகம்இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

அடிப்படை வசதிகள் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

திருப்பூர் மாநகராட்சி, 59-ஆவது வார்டுக்குள்பட்ட ஆண்டிபாளையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி, அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Published On :

திருப்பூர் மாநகராட்சி, 59-ஆவது வார்டுக்குள்பட்ட ஆண்டிபாளையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி, அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 திருப்பூர் மாநகராட்சி, 59-வது வார்டுக்கு உள்பட்ட தனலட்சுமி நகர், ஆண்டிபாளையம், முல்லை நகர், குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், இப்பகுதிகளில் சாக்கடை கால்வாய்  சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, அப்பகுதி பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த மாநகராட்சி 4-ஆவது மண்டல உதவி ஆணையர் செல்வநாயகம், பொறியாளர் ரவி உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், விரைவில் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றி தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.