உத்தரப் பிரதேச மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக!மருத்துவத்துக்கான நோபல் பரிசு: மூவருக்குப் பகிர்ந்தளிப்பு!நாளை முதல் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை உயர்த்தும் இண்டிகோ! எஸ்ஐஆர் விவகாரம்: ஞானேஷ் குமாரை இடைநீக்கம் செய்ய உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு!சென்னை பூங்காவிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு ரயில்கள் இயக்கம்!ஜூலையிலேயே சதி! கட்டடம் அல்லது விமானத்தின் மீது மோத திட்டம்! ப்ளைதுபை துணை விமானி வாக்குமூலம்பிளேக் தொற்றுக்கு பலியான ரஷிய ஆய்வாளர்! ஆய்வக குழாய் வெடித்து பரவியதா? அதிர்ச்சித் தகவல்பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத்தை எதிர்த்த வழக்கு வாபஸ்!திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! 2006 கேரள லஞ்ச முறைகேடு வழக்கு! குரூப் 4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது! 10,000 பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு

வட்டமலைகரை ஓடை அணையில் தண்ணீர் நிரப்ப விவசாயிகள் கோரிக்கை

பாலைவனமாகி வரும் வட்டமலைகரை ஓடை அணைக்கு அமராவதி அணையின் உபரி நீரை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published On :

பாலைவனமாகி வரும் வட்டமலைகரை ஓடை அணைக்கு அமராவதி அணையின் உபரி நீரை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்ன ராமசாமி தலைமை வகித்தார். இதில், அனைத்துத் துறை அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர். முதலில், கடந்த கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

 கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

பாலசுப்பிரமணியம்: திருப்பூர் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக மின்தடை அதிகரித்து வருகிறது. பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுத்தமாக மின்சாரம் இல்லாததால், விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கேசவன்: கவுண்டம்பாளையம் நான்கு சாலைப் பிரிவில் ஒரு பிரிண்டிங் நிறுவனத்தில் சுத்திகரிக்கப்படாமல் சாயக்கழிவு நீரை வெளியேற்றி வருகின்றனர். இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 ஈஸ்வமூர்த்தி: வட்டமலைகரை ஓடை அணை, கடந்த 15 ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் வறண்ட பாலைவனம் போல் உள்ளது.

 இந்நிலையில், இந்த அணைக்கு பி.ஏ.பி.,லிருந்து தண்ணீர் நிரப்ப அரசாணை இருந்தும் அதை அதிகாரிகள் நடைமுறைப்படுத்தவில்லை. தற்போது அமராவதி அணையில் வெளியேறும் உபரி நீரை உப்பாற்றில் விட்டு அங்கிருந்து வாய்க்கால் வெட்டி வட்டமலைக்கரை ஓடை அணைக்கு தண்ணீர் கொண்டு செல்ல சாத்தியம் உள்ளதாக அறிகிறோம். எனவே அத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 துரைசாமி: திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள வாய்க்கால்களை 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈஸ்வரன்: திருப்பூர் ஆண்டிபாளையம் மற்றும் வீரபாண்டியில் உள்ள பி.ஏ.பி பாசன பகுதிகள், தற்போது வீட்டுமனைகளாக மாறியுள்ளது. இதன் அருகே உள்ள வாய்க்கால் தண்ணீர் லே-அவுட் பகுதிகளுக்குள் சென்று வீணாகிறது. எனவே, வாய்க்கால்களில் உள்ள ஷட்டர்களை அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.