அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

சின்னமுத்தூர் அரசுப் பள்ளிக்கு தேசிய விருது

தேசிய அளவில் தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்த பள்ளிக்கான விருது திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், சின்னமுத்தூர் ஊராட்சி அரசு நடுநிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளது.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

தேசிய அளவில் தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்த பள்ளிக்கான விருது திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், சின்னமுத்தூர் ஊராட்சி அரசு நடுநிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் தமிழ்நாடு அரசு எல்காட் நிறுவனம் ஆகியவை சார்பில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான போட்டிகளில் இந்தியாவின் 12 மாநிலங்களில் இருந்து 1,316 பள்ளிகள் பங்கேற்றன.

இதில், தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்த பள்ளிக்கான விருது மற்றும் சான்றிதழ் திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோயில் ஊராட்சி ஒன்றியம், சின்னமுத்தூர் ஊராட்சி அரசு நடுநிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டது. மேலும், சிறப்பாகக் கல்வியளிக்கும் அரசுப் பள்ளி என்ற பெருமையையும் இந்தப் பள்ளி பெற்றது.

இதற்கான விருது வழங்கும் விழா சென்னையில் கடந்த வாரம் நடைபெற்றது.

விருது பெற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் கிருஷண்வேணி, இடைநிலை ஆசிரியர் செல்வபிரகாஷ் உள்ளிட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரை வியாழக்கிழமை நேரில் சந்தித்து விருது மற்றும் சான்றிதழ்களைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.பிரசன்ன ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.