திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த முகாமுக்கு ஆட்சியர் ச.ஜெயந்தி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவித் தேர்தல் அலுவலர்கள் மற்றும் பல்வேறு குழுவினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள், தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமல்படுத்துதல், வாக்குச் சாவடியில் மேற்கொள்ள வேண்டிய வசதிகள், வாக்குச் சாவடி அலுவலர்களின் பணிகள், மண்டல அலுவலர்கள், தேர்தல் பணியாளர்களின் பணிகள், வேட்பு மனு தாக்கலின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள், ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் பணிகள், ஊடக மையம் அமைத்தல், வாக்காளர் விழிப்புணர்வுப் பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து அலுவலர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.பிரசன்ன ராமசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரியோ நடிக்கும் ராம் இன் லீலா படத்தின் டிரைலர் அறிவிப்பு!

காதல் காதல் காதல் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

பெண்கள் ஜீன்ஸ் அணிவதால் வன்கொடுமை.. தில்லி உயர்நீதிமன்றம் அளித்த காட்டமான பதில்!
லோகேஷ் கனகராஜ் நடித்த டிசி படத்தின் வசூல் நிலவரம்!
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


