அவிநாசியில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.10 லட்சத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்றது.
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்துக்கு 741 மூட்டைகள் வந்திருந்தன. இதில், ஆர்.சி.எச் ரகப் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4,500 முதல் ரூ. 5,320 வரையிலும், மட்டரகப் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1, 200 முதல் ரூ.2,000 வரையிலும் ஏலம் போனது. டி.சி.எச். ரக பருத்தி வரத்து இல்லை. மொத்தம் ரூ.10 லட்சத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.