இருசக்கர வாகனம் திருட்டு: இளைஞருக்கு 6 மாதம் சிறை
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் இருசக்கர வாகனம் திருடிய வழக்கில் இளைஞருக்கு 6 மாத கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது.


திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் இருசக்கர வாகனம் திருடிய வழக்கில் இளைஞருக்கு 6 மாத கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது.
அவிநாசி, ராயங்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன்(52). இவர், ஆட்டையாம்பாளையம் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி நிறுத்தி விட்டு நிறுத்தி சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வாகனத்தை காணவில்லை.
இதுகுறித்து அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக மதுரை, அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் குமரன் (24) என்பவரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அவிநாசி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், இருசக்கர வாகனம் திருடிய குமரனுக்கு, 6 மாத கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...