மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

மத்திய அரசைக் கண்டித்து, திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், குமரன் சிலை முன்பு புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ப.கோபி தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் முத்துசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மகன் ஜெய் ஷாவின் நிறுவனத்தில் முறைகேடு நிகழ்ந்ததாக புகார் எழுந்துள்ளது குறித்து  மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட துணைத் தலைவர் சக்திவேல், மாநில தாழ்த்தப்பட்டோர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தா.செல்வகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com