சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டு

உடுமலையை அடுத்துள்ள பள்ளபாளையம் ஸ்ரீ ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ,  மாணவிகளுக்குப் பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 12:20 am

DIN

உடுமலையை அடுத்துள்ள பள்ளபாளையம் ஸ்ரீ ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ,  மாணவிகளுக்குப் பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
உடுமலை ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலை இலக்கியப் போட்டிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் உடுமலை வட்டத்தில் உள்ள 25- க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றன. இதில்,  பள்ளபாளையம் ஆதர்ஷ் வித்யாலயா பள்ளி 78 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தது. இதற்காக ஒட்டுமொத்த ரன்னர்ஸ் கோப்பையை இப்பள்ளி வென்றது. இதையொட்டி பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளித் தலைவர் டாக்டர் பி.எம்.பாலசுப்பிரமணியம்,  செயலர் டாக்டர் கே.பாலசுந்தரம், இயக்குநர்
எம்.சுப்பிரமணியம்,  முதல்வர் ஜீ.ஜீவ அலெக்சாண்டர் உள்ளிட்டோர் மாணவ, மாணவிகளைப் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.